கல்முனையில் மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வீதியில் நடமாடக் கூடாது - கல்முனை பொலிஸ்.
அறிவு பூர்வமான செயற்பாடுகளுக்கு பயன் படுத்தப்படும் தகவல் தொழில் நுட்பம் குற்றச் செயல்களுக்குப் பயன் படுத்தப்படுவதாக கல்முனை பொலிஸ் நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்.யு.ஏ.கப்பார் குற்றம் சாட்டினார்.
கல்முனை 1-B பிரிவு கிராமசேவையாளர் பகுதிக்கான சிவில் பாது காப்பு குழுக்கூட்டம் நேற்று 12.01.2013 மாலை 5.00 மணிக்கு கல்முனை கானான் கிறிஸ்தவ தேவாலய மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ. கப்பார் தலைமையில் நடை பெற்றது.
இக் கூட்டத்தில் சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி ஐ.பீ .வாஹிட் ,சிவில் பாதுகாப்பு குழுக்களின் கண்காணிப்பு குழு அங்கத்தவர் வீரவாகு ,கல்முனை வெஸ்லி கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் உட்பட கிராம சேவகர்கள் ,சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.உவைஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கல்முனை பொலிஸ் நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ. கப்பார் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது பலவருடங்களாக சட்டம் ஒழுங்கு பல்வேறு காரணங்களினால் இப்பிரதேசங்களில் அமுலில் இருக்கவில்லை இதனால் சட்டத்தை மக்கள் இன்னும் புரியாமல் இருக்கின்றனர். இந்த பொறுப்பை சிவில் பாதுகாப்பு குழுக்கள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் .கூடுதலான தண்டப்பணம் செலுத்தும் பிரதேசமாக கல்முனை காணப்படுகின்றது. பல குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கி வருகின்றோம்.
அளவை நிறுவை விடயத்தில் தவறுகள் நடைபெறுகின்றன , கல்முனை பொது சந்தைக்குள் பெண்கள் சுயமாக சென்றுவர முடியாத நிலை காணப்படுகின்றது. அந்தநிலையை மாற்றியமைக்க மாநகர முதல்வருடன் பேசி இருகின்றேன். இறைச்சி விற்பனை செய்பவர்கள் பொலிசாரின் நிபந்தனைகளுக்குட்பட்டு தங்களின் வியாபாரத்தை நடாத்த வேண்டும் .
மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வீதியில் நடமாடக் கூடாது இவ்விடயத்தை பாடசாலை நிர்வாகத்தோடு பெற்றோரும் கவனத்தில் எடுக்க வேண்டும் .
பெற்றோர் பிள்ளைகளுடன் இருந்து தொலைக்காட்சியில் சினிமா ,நாடகம் பார்கின்றனர் அதனால் அந்த வீட்டில் மாணவர்களுக்கு படிக்கின்ற சூழல் இல்லாமல் போகின்றது . தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒலிபரப்பு செய்யப் படுகின்ற நாட்களில்தான் கூடுதலான கொள்ளை சம்பவங்கள் இடம் பெறுகின்றன .
இந்த நாட்களை அவதானித்து கூடுதலான பொலிசாரை குறித்த பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. கூடுதல் மது,புகை பாவனை கல்முனை பிரதேசத்தில் காணப் படுகின்றது.
குறிப்பாக இணையதளங்கள் ,கைத் தொலை பேசிகள் ஊடாக இளைஞ்சர்கள் திசை மாறி செல்கின்றனர் இவர்களை பெற்றார் கண்காணிக்க வேண்டும் தொழில் நுட்பம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு குற்றசெயல்கள் இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ் நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ. கப்பார் அங்கு தெரிவித்தார்.
கல்முனை மாநகரத்தை பிரதிநுவப்படுத்தும் ஒவ்வொரு குடிமகனும் இவ் முகநூல் பக்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். (Like Our Page )
https://www.facebook.com/makkal.saithi






0 comments:
Post a Comment