<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

ஜனாதிபதி மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

mahinda-vikki01
mahinda-vikki02
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் உடனிருந்தனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger