நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்ற முயற்சி
ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச அவர்கள் தொழில் அமைச்சராக இருந்த வேளையில் அவரது
சிந்தனையில் உருவான தொழிற்பயிற்சி அதிகார சபை இன்று நாடு பூராயும்
கிராமங்கள் தொடக்கி நகரங்கள் வரை படித்து விட்டு வீடுகளில் முடங்கிக்கிடந்த
இளைஞர் யுவதிகளை, அவர்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைக்கக்கூடியவர்களாக
மாற்றி தொழிற் புரட்சி ஒன்று ஏற்படுத்தியுள்ளது.
இதன்
அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும் அப்போதைய தொழில் அமைச்சராக விளங்கிய
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பங்குபற்றுதலுடன் முஸ்லீம் காங்கிரசின்
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபின் முயற்சியால் நோராட் நிறுவனத்தின்
உதவியைக்கொண்டு கடந்த 1997ம்
ஆண்டு முதன் முறையாக பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் பல தொழிற்பயிற்சி
நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் நிந்தவூரில் மாவட்ட
தொழிற்பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
அவர்களால் நடப்பட்டது.
நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தின் கீழ் தமிழ் பேசும் பிரதேசங்களில் 11 நிலையங்களும், சிங்கள பிரதேசங்களில் 06 நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையத்தின் ஊடாக இப்பிராந்திய இளைஞர் யுவதிகள் பாரிய அளவில் நன்மையடைந்து வருகின்றனர்.
இவ்வாறான
நிலையில் குறுகிய சிந்தனை மற்றும் பிரித்தாளும் தன்மை காரணமாக
பெரும்பான்மையாக தமிழ் பேசுபவர்களைக்கொண்ட அம்பாறை மாவட்டத்தில்,
நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இங்கிருந்து
பெரும் பான்மையினர் வாழும் பிரதேசத்துக்கு இடமாற்றுவதற்கு முயற்சிகள்
மேட்கொள்ளப்படும் நிகழ்வானது நாட்டில் வாழும் சிறுபான்மையினர் மத்தியில்
பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கு கல்வி பயிலும் மாணவர்கள்
தங்களது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின்மீது இனவாதிகளால்
நெருக்குதல்கள் அதிகரித்துள்ள இவ்வேளையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி
அலுவலகத்தை இடமாற்ற எடுக்கப்படும் முயற்சிகளையும் சிறுபான்மை மக்களுக்கு
எதிரான ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளதாக அங்கு கல்வி பயிலும் மாணவர்கள்
கூறுகின்றனர்.





0 comments:
Post a Comment