வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை?
மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 100,000 திற்கும் மேற்பட்ட வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை குறித்து மீள்குடியேற்ற அமைச்சு உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் மீள்குடியேற்ற அமைச்சராக கடமையாற்றிய போது, 300,000 தமிழ் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்காலிக இடங்களில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் போது சகல தமிழர்களும் மீள்குடியேற்றப்பட்ட போதிலும், முஸ்லிம்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆளும் கூட்டணியில் அமைச்சரவையை பங்கு போட்டுள்ள அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஒரு தாசாப்பகால ஆளும் கூட்டணி அரசியலிலும், 2005 இற்குப் பின் ஏனைய முஸ்லீம் அமைச்சர்களுக்கு இல்லாத செல்வாக்குடன் முக்கிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களை தக்க வைத்திருந்தும் முஸ்லீம்களை மீளக் குடியேற்றாததற்கு யார் காரணம் என்ற கேள்வியை முஸ்லீம் ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர் என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 comments:
Post a Comment