ஜில்லாவை தடைசெய்யுமாறு கோரி வழக்கு
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஜில்லா’ நாளை உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான பணிகளை படக்குழு படுதீவிரமாக செய்து வரும் வேளையில், சென்னை சிவில் நீதிமன்றத்தில் ‘ஜில்லா’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
சோலையூரைச் சேர்ந்த ஆர். மகேந்திரன் என்பவர் 16வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில்,
“சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். ‘ஜில்லா’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் டி.வித் தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்தேன்.
தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளேன். இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10ம் தேதி வெளியாகப் போவதாக பத்திரிக்கையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் வெளியாகும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். ” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஜில்லா’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதேவேளை, இளைய தளாதி விஜயின் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் ஜில்லா திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் அமோகவரவேற்பு கிடைத்து்ளது. நளைய தினம் உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் ஜில்லா திரைப்படம்
இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் பல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
எப்போதுமே விஜய் படத்திற்கு அமெரிக்கா,மலேசியா,பிரிட்டன் மற்றும் இலங்கையில் சிறந்த வரவேற்பு உள்ள
நிலையில் ஜில்லா திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாக பட தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இளைய தளபதி விஜய்யுடன் மோகன்லாலும் இணைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இதுவரை இதுவரை 11 நாடுகளில் மொத்தம் 213 திரையரங்குகளில் வெளியாக ஆக ஒப்பந்தம் ஜில்லா திரைப்படம்
ஒப்பந்தமாகியுள்ளது. இந்தபட்டியல் நீண்டுவருவதாக வினியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.
மலேசியாவில் மிக அதிக தியேட்டர்களில் வெளியான தமிழ்ப்படம் எந்திரன் என்ற சாதனையை ஜில்லா முறியடிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் “வீரம்” படம் இதுவரை 153 வெளிநாட்டு திரையரங்குகளில் திரையிட ஒப்பந்தமாகியுள்ளது.
தமிழகத்தின் இரண்டு முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் உலகளாவிய ரீதியில் ஒரே தினத்தில் வெளியாக உள்ளமை இரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பை தோற்றுவித்துள்ளது.





0 comments:
Post a Comment