லண்டனில் இலங்கைப் பெண் இரு பிள்ளைகளுடன் மரணம்
லண்டனில் பிரண்ட் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் இறந்துகிடக்க காணப்பட்டுள்ளார்.
வுட்கிரஞ்ச் குளோஸ் என்னும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 33 வயதான தாய், அவரது 5 வயது மற்றும் 9 மாதங்கள் நிறைந்த இரு மகன்மார் ஆகியோரின் சடலங்கள் வியாழனன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரு சிறுவர்களின் மரணத்தை கொலையாக எடுத்து பொலிஸார் ஆராய்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் மரணம் குறித்த மரண பரிசோதனையில் அவருக்கு கழுத்தில் நெரிபட்டிருந்ததால் மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிறுவர்களின் பிரேதப் பரிசோதனை திங்களன்று நடக்கும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எவரையும் பொலிஸார் தேடவில்லை என்று ஸ்காட்லாண்ட் யார்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இப்படியான ஒரு சம்பவம் தமது பகுதியில் நடந்ததை தம்மால் நம்ப முடியவில்லை என்று அயலவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது, இவர்கள் மூவரும் காயத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆம்புலன்ஸை அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் வந்து இவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஒருவருடமாக இந்த வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment