<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

வழிபாட்டிடங்களுக்கு புத்தசாசன அமைச்சின் அனுமதி தேவை'

இலங்கை அரசாங்கச் சின்னம்
இலங்கையில் புதிதாக மத வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம். கே. பீ. திஸாநாயக்கவினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் உள் நாட்டு பத்திரிகைகளில் இன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விகாரைகள், கோயிலகள், மசூதிகள், தேவாலயங்கள், தியான நிலையங்கள், ஜெப நிலையங்கள் ஆகியவை எவ்வித தர நிர்ணயங்களும் இன்றியும் அனுமதி இன்றியும் பரவலாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
அரச மரம், சிலைகள், தர்மச் சக்கரம் மற்றும் சிலுவை போன்றனவும் இதில் உள்ளடக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டு, இந்த நிலைமை மத ஒற்றுமைக் கோட்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த அனுமதி தொடர்பாக 2008ம் ஆண்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையும் இந்த அறிவித்தலில் நினைவு படுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger