<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

வடக்கில் இயங்கி வந்த பாதாள குழு கைது: ஆபத்தான ஆயுதங்களும் மீட்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பாதாள உலகக் குழு ஒன்றை கோப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிசார் கைது செய்துள்ளதோடு குறித்த குழுவிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள், வாள்கள், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
 
“ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவதாகவும் இக்குழுவுக்கு குமரேசன் வினோதன் என்ற இளைஞரே தலைமை தாங்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுக்கள் வழிப்பறி கொள்ளைகள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் இந்தக் குழுவினருக்கு தொடர்புகள் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
 
தற்போது இந்தக் குழவில் உள்ள ஒரு சிலர் பயங்கரமான ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு சிலரை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தக் குழுவினர் கூலிக்கு பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தவர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 
 
சில மாதங்களுக்கு முன்னர் கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைகளை வெட்டி காயப்படுத்தியவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger