<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள எச்சரிக்கை – கடல் அலை 3 மீற்றர் வரை உயரலாம் அவதானமாக இருக்கவும்

கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடாவில் தோன்றியிருந்த வளிமண்டலக் குழப்பமானது, தற்போது வலுவடைந்து, வலுவான தாழமுக்கமாக (Deep Depression) உருமாறி, திருகோணமலையிலிருந்து கிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்திலும் நாகபட்டணத்திலிருந்து தென்கிழக்காக 340 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது நிலைகொண்டுள்ளது. இதன் காரணத்தினால் இலங்கையின் வட பிராந்தியங்களிலும் வடகடல் பகுதிகளிலும் கடும் காற்றுடன் பலத்த மழை காணப்படும்.
மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளின் சில பிரதேசங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சியும் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்திலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
வடபிராந்தியங்களிலும் வடகடல் பகுதிகளிலும் அடிக்கடி மழை காணப்படுவதுடன் இந்தக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும். அத்துடன் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை காணப்படும். பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 30 கிலோமீற்றர் முதல் 50 கிரோமீற்றர் வரையான வேகத்தில் காணப்படும். மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடான முல்லைத்தீவு வரையான ஆழ்கடல்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.
மேற்குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளில் கடல் அலையானது சில சந்தர்ப்பங்களில் 3 மீற்றர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
20140105-124129.jpg
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger