மனிதப் புதைகுழியில் குழந்தைகளும் புதைக்கப்பட்டிருக்கின்றன?!
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20 ஆம்
திகதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 15
உம் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார்
நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய
நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8
மணிமுதல் மாலை 2.15 மணிவரைக்கும் மனித புதைகுழி தோண்டப்பட்ட போது 4 மனித
எழும்புக்கூடுகள் மீட்கப்படடிருந்தது.
இந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி
கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று சனிக்கிழமை காலை 8 மணிமுதல்
மாலை 2.15 மணிவரை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் சட்ட வைத்திய
நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதை குழி
தோண்டும் நடவடிக்கை இடம் பெற்றது.
இதன் போது புதிதாக 3 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை குறித்த புதை குழியினுள் மனித
பற்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பற்கள் சுமார் 6 வயதுடைய
குழந்தைகளுடையதாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
இன்று சனிக்கிழமை வரை 18 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment