<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கோவை அருகே பெண்ணை கொன்று புதைத்த காதலன்

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்ச வேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது மகள் சசிகலா (வயது 24). கோதவாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த வினோத் என்பவரும் வேலை பார்த்து வந்தார். சசிகலாவுக்கும், வினோத்துக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சசிகலா வீடு திரும்பவில்லை. எனவே அவரது தந்தை பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் சசிகலாவை அவரது காதலன் வினோத் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வினோத்தை போலீசார் தேடி வந்தனர். வினோத் போத்தனூர் ரெயில் நிலையத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கே விரைந்து சென்ற போலீசார் வினோத்தை கைது செய்தனர்.
வினோத் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதன் விவரம் வருமாறு:–
நான் வேலை பார்த்த கம்பெனியில் சசிகலாவும் வேலை பார்த்தார். எங்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் நான் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது எங்கள் இருவருக்குமான காதல் முறிந்தது. சசிகலாவை பார்க்க சென்ற என்னை அவர் இனிமேல் என்னை பார்க்க வராதே என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.
திட்டமிட்டபடி காரில் அவர் வேலை பார்த்த கம்பெனிக்கு சென்ற நான் அங்கிருந்த சசிகலாவை கடத்தி சென்றேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து காரில் இருந்து தப்பிக்க முயன்றார்.
அதனால் நீலாம்பூர்– ஈச்சனாரி சாலையில் அவரை காரில் இருந்து இறக்கி புதருக்குள் அழைத்து சென்று கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்தேன். பின்னர் ரெயில் மூலம் திருச்சிக்கு சென்று பதுங்கிக் கொண்டேன். 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பிய என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger